Microsoft Word இல்லாதவர்கள் ebook formatting செய்வதற்கு சற்றே சிரம பட்டாலும், Google Docs மூலம் நாம் அதை செய்து விடலாம்.
இந்த ப்ளாக் போஸ்ட்டில் அதை எப்படி செய்வதென்று காண்போம்.
- docs.google.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கே அக்கௌன்ட் இல்லையெனில் புதிதாக ஒரு account ஐ ஓபன் செய்து கொள்ளவும். உங்களிடம் Gmail account இருந்தால், அதுவே போதும், அதை வைத்தே நீங்கள் இலவசாமாக இதிலும் நுழைந்து விடலாம்.
- உங்களது புத்தகத்தை எழுதி முடியுங்கள். தமிழில் எழுதுவதற்கு, File -> Language -> தமிழ் கிளிக் செய்யுங்கள்.
- புத்தகம் நிறைவான பின், formatting வேலையை தொடங்கி விடலாம்.
நீங்கள் செய்ய வேண்டியவை, இதோ:
- டைட்டில், சப்- டைட்டில்,
- தலைப்புகள் (Headings),
- பத்தி (Paragraphs),
- Pagebreaks,
- பொருளடக்கம் (Table of Contents), etc. இவைகள்தான் மிக முக்கியமானவைகள்.
Title and Sub-titles
வார்த்தைகளை select செய்த பின், இந்த screenshot ல் காண்பதைப்போல், டைட்டில் அல்லது subtitle என வேண்டியதை கிளிக் செய்து கொண்டால் எழுத்துக்கள் மாறி விடும்.
Headings
அதேபோன்று, Headings கூட மாற்றி கொள்ளலாம். பொதுவாக, Front Matter sections, புதிய அத்தியாயங்கள் இவை அனைத்தும், புதிய பக்கத்திலுருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதன் தலைப்புகளை Heading tags மூலம் இப்படி styling செய்து கொள்ளலாம்.
பத்திகள் (Paragraphs) & Indents
பொதுவாக பத்திகள் ஆரம்பிக்கும் பொழுது ஒரு சின்ன gap இருக்கும். இதன் பெயர் indent என்பார்கள். இதை பெற, சிலர் Tab key ஐ உபயோகிப்பார்கள். இது தவறு. ebook ல் ஒரு பொழுதும் tab key உபயோகிக்கக்கூடாது. இதற்க்கு ஒரு setting இருக்கிறது:
Format -> Align & indent -> Indentation options…
Special -> First line என்பதை கிளிக் செய்யவும். செய்த பின் 0.3 அல்லது 0.5 என கொடுக்கவும்.
இப்படி செய்தால், பத்திகள் எல்லாம் படிப்பதற்கு அழகாக மாறி விடும்.
Line Spacing
அடுத்ததாக பத்திகளுக்கு இடையே உள்ள லைன் ஸ்பெசிங் எப்படி கொடுப்பதென்பதை பார்ப்போம்.
Format -> Line spacing -> Add space before paragraph
Format -> Line spacing -> Add space after paragraph
இவ்விரண்டையும் அல்லது எதாவது ஒன்றை தேர்வு செய்யவும். இதை செய்தால், பக்கங்கள் படிப்பதற்கு எளிதாக அமையும்.
Page-breaks
புத்தகத்தின் ஒவ்வொவொரு அத்தியாயமும் புதிய பக்கத்தில் ஆரம்பித்தால் அழகு. இதை செய்வதற்கு Page-breaks எனப்படும் பக்க இடைவெளிகளை, கொடுப்பது அழகு. இதை செய்ய, CTRL + ENTER அல்லது,
Insert -> Break -> Page break என்ற option ஐ கிளிக் செய்யவும்.
பொருளடக்கம் (Table of Contents)
Kindle ஈ-பூக் ஒரு பொழுதும், பக்க எண்ணிக்கைகளை காட்டுவதில்லை. இதன் பொருட்டு, நமது புத்தகத்திற்கு பொருளடக்கம் எனப்படும் Table of Contents இணைக்கும் பொழுது, வெறும் தலைப்புகளாக கொடுத்திட வேண்டும். இவை hyperlinks ஆக இருந்திட வேண்டும். நாம் முன்னே கண்ட Titles, Subtitles, Heading tags இவை அனைத்தும் Table of Contents ஐ உருவாக்க உபயோகப்படும்.
இதை செய்வது மிகவும் எளிது.
ஆரம்ப பக்கங்களில் ஒரு புதிய பக்கத்தில், Insert -> Table of Contents ->With blue links என்பதை கிளிக் செய்யவும். உங்களது அனைத்து Titles, headings, இங்கே அழகாக வந்து அமர்ந்து விடும்.
இவைகளே ebook formatting செய்வதற்கு முக்கிய கோட்பாடுகள்.
மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோ வை பாருங்கள்.
Related: How to Update Payment and Bank Info on KDP (in Tamil)
Thillainayagam says
Bro kindle e-book how to link our account to earn money for the book
Arun Sarathy says
Hi, you can link your bank account to the KDP account. This video will explain the process step by step: https://youtu.be/6-j5fJdDss0.
Nithya says
ப்ரோ நான் உங்க வீடியோ பாத்து கூகுள் டாக்ஸ்ல எழுதி (tamil) அத word டாக்குமெணட்டா டவுன்லோட் பண்ணினேன். அத kdp ல அப்லோட் பண்ணி preview பாத்தேன். ஆனா அதே மாதிரி அது எடுத்திக்குல, நிறைய இடத்துல அது, அதுவா தப்பு தப்பா format பண்ணி வச்சிருக்கு, நான் பண்ணி வச்ச formation சிலது அதுவே மாத்தி இருக்கு. மத்த படி அது போட்டு வச்சு இருக்கற தமிழ் font நல்ல இருக்கு. ஏன் இந்த issue வருது.?மேலும், kdp previewல டாக்குமெண்ட்க்கு நான் page numbers போட்டு வச்சேன் preview ல அது வரவே இல்ல. Why?
செரி kindle create டவுன்லோட் பண்ணி, word டாக்குமெண்ட அப்லோட் பண்ணினேன். அதுலையும் இதே issue தான் ப்ரோ, எழுதி வச்சிருக்க 300பக்கத்துக்கும் கண்ணா பின்னா சிறுசும் பெருசும்மா அதுல அதுவே formation பண்ணி டாக்குமெண்ட்ட கெடுத்து வச்சிருக்க்கு. செரி அதுலே correction பண்ணலாம்னு பார்த்த 300 பாக்கத்துக்கும் ஓவ் வொரு word word பண்ண வேண்டியதா இருக்கு. Solution சொல்லுங்க ப்ரோ. Ennagala மாதிரி புதுசா எழுத ஆரம்பிச்சி இருக்கிறவங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் கிண்டல் create ல ஆன்லைன் தமிழ் fonts யூஸ் பண்ண முடியமா. இல்ல அதுல defaulttaa இருக்கறது தான் யூஸ் பண்ண முடியுமா.
ப்ரோ, இப்போ நான் கமெண்ட் section ல type பண்ணற தமிழ் font நல்லா இருக்கு அது என்ன font னு லிங்க் கொடுங்க ப்ளீஸ்.
தேங்க்ஸ் in அட்வான்ஸ்.
Arun Sarathy says
Ungaloda downloaded script in Word doc, atha oru screenshot eduthu anuppa mudiyuma? (to this email ID: arun @ tamilvarigal.com). Endha mathiri errors varudhunnu enakku paartha thaan solla mudiyum. If possible, send screenshots of all your different kinds of formatting errors.
Intha website la irukkura font: Mukta Malar font. https://fonts.google.com/specimen/Mukta+Malar
Nithya says
Bro i mailed u my screenshots
Arun Sarathy says
Ya, will check them and get back.